• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காப்பீட்டுத் துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் பத்ரா புதிய அலுவலகம் துவக்கம்

May 23, 2022 தண்டோரா குழு

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பத்ரா என்ற பன்னாட்டு நிறுவனம் காப்பீட்டுத் துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கிவரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் தனது நிறுவனத்தை தொடங்கியது. தொடர்ந்து பெங்களூர், ராய்ப்பூர் உள்ளிட்ட இந்திய நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் புதிய அலுவலகம் கோவை நவ இந்தியா பகுதியில் இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் பத்ரா நிறுவன பொது மேலாளர் ரகுநாதன், துணைத் தலைவர் எலிசபெத் மெகார்மிக், நிர்வாக இயக்குனர் லட்சுமி, முதன்மை செயல் அதிகாரி ஜேசன் டேவிஸ், சர்வதேச சேவை வழங்குதலுக்கான இயக்குனர் வில் குக், தர இயக்குனர் இக்பால் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் எங்களது நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் எங்களது அலுவலகத்தைச் திறந்துள்ளோம். இந்த அலுவலகத்தில் 300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.என்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

பி.காம்., எம்.காம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். மாதந்தோறும் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.எங்களது நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது 48 சதவீதம் எங்கள் நிறுவனத்தில் பெண்கள் பணிபுரிகின்றனர். இது விரைவில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க