• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

October 2, 2021 தண்டோரா குழு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை வீரகேரளம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணல் மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை காந்தி ஜெயந்தி விழாவாக நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக விழாவில் தேசிய கொடியேற்றி, பின்னர் தேசத்திற்காக உழைத்த காங்கிரஸ் பேரியக்க தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் அழகு ஜெயபால்,மகேஷ் குமார்,கணபதி சிவக்குமார், சௌந்தரகுமார், விஜயகுமார்,பழயூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க