• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த வாலிபர் கைது

January 28, 2020

கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணுக்கும் ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த்து. இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும்,சமூக வளைதளங்களிலும் பகிர்வதாக மிரட்டியதோடு, அந்த பெண்ணின் சகோதரியின் கைப்பேசிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.அதன்பேரில் ரூபனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ரூபன் ஆபாச படங்களை பகிர்ந்த்து உறுதி செய்யப்பபட்டது.இதனையடுத்து ரூபன் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட இரு பிரிவுளின் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையலடைத்தனர்.

மேலும் படிக்க