• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கு பெட்ஷீட் விநியோகம்

February 14, 2018 தண்டோரா குழு

கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மெட்ரோ பாலிஷ் & சேன்ஜ் பவுண்டேசன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு 500 பெட்ஷீட்  மற்றும் 70 குப்பை தொட்டிகள் வழங்கினர்.

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவையில் உள்ள முண்ணனி கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும்,கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்து,மருத்துவமனை வளாகங்களில் மரங்கள் நட்டனர். மாணவ மாணவிகளுக்கு காதலர் தினம் என்பது அருகில் இருக்கும் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்வுகள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில்,சேன்ஜ அமைப்பு நிர்வாகி தஸ்லீமா நஸ்ரின்  கலந்து கொண்டு  அன்பு என்பது அனைவர் மீதும் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  பேசினார்​. ரோட்டரி கிளப் தரூண் ஷா மற்றும் அரசு மருத்துவமனை டீன் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க