• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டு யானைகளை விரட்ட புதிய கும்கி யானைகள்!

April 4, 2018 தண்டோரா குழு

கோவையில் காட்டு யானைகளை விரட்ட,முதுமலை புலிகள் காப்பகத்தில் பயிற்சி பெற்ற 2 கும்கி யானைகள்,சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் இருந்த சுஜய்,பாரி அகிய கும்கி யானைகளுக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு,முதுமலைக்கு அனுப்பப்பட்டது.

இந்த யானைகளுக்கு பதிலாக,முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சேரன்  (32) , ஜான் (27) எனப்படும் 2 கும்கி யானைகள் இன்று சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.கிராமங்களில் புகும் காட்டு யானைகளை விரட்டுவதில் 2 கும்கிகளும் சிறப்பு பயிற்சி பெற்றவை.

தமிழக கேரள எல்லைகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பல ஆப்ரேசன்களில் இரண்டும் வெற்றிகரமாக செயல்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.  30வயதுடைய இந்த யானைகள், இனி வன ரோந்து பணிகளில் ஈடுபடும் என வனப்பாதுகாவலர் ராம சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் படிக்க