October 31, 2020
தண்டோரா குழு
கோவையில மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
அண்மையில் விவசாயிகளுக்கு எதிராக 3 சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மறைந்த முன்னால் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினம் விவசாயிக உரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு,இந்த தினத்தில், மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்,மயூரா ஜெயக்குமார்,தலைமையில் நடைபெற்ற இதில், மாநில,மாவட்ட நிர்வாகிகள், சார்பு, பகுதி,வட்டம்,அமைப்பு பல்வேறு நிலை காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.