• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது !

December 26, 2021 தண்டோரா குழு

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

தமிழிலக்கியத்திற்குச் நவீன செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக ‘ விஷ்ணுபுரம் விருது ‘ கடந்த 2010 – ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும் , பாராட்டுப் பத்திரமும், ரூ . 2,00,000 / -விருதுத் தொகையும் உள்ளடக்கியது.

இந்நிலையில்,கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2021 – ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.இவ்விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ்,தெலுங்குக் கவிஞர் வடரேவு வீரபத்ருடு ,இயக்குனர் வசந்த் எஸ்.சாய் , எழுத்தாளர் சோ.தருமன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் விருது பெறும் எழுத்தாளுமை பற்றிய ஆவணப்படமும் ,அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்பட்டது. மேலும், விருதாளரின் படைப்புகள் குறித்து இலக்கிய அமர்வுகள் நடத்தப்பட்டன.

யார் இந்த கவிஞர் விக்ரமாதித்யன் ?

விக்ரமாதித்யன் 25 / 09 / 1947 – ல் கவிஞர் திருநெல்வேலியில் பிறந்தார் . இவரது இயற்பெயர் நம்பிராஜன். இவர் சோதனை , அஸ்வினி . தராசு , நக்கீரன் , இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் சில காலம் பணிபுரிந்தார் .நவீன கவிதையில் தமிழ் மரபு சார்ந்த படிமங்களையும் , தமிழ் மரபுக்குரிய மொழியோட்டத்தையும் கொண்டு வந்தவரென இவரைச் சொல்லலாம் . இறுக்கமான படிமச்செறிவுக்கும் , இசையற்ற கூற்றுமொழிக்கும் மாற்றாக இவரது கவிதைகள் விளங்கின விளக்கு விருது , சாரல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க