• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

May 22, 2018 தண்டோரா குழு

தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் கோவையில் உள்ள நீர்நிலைகளிலும்,கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரிலும் கலப்பதை தடுக்க கோரி,கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் இன்று(மே 22)மனு அளித்தனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரில்,தோல் தொழிற்சாலை கழிவுகள்,நகராட்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கலப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கழிவுநீர் கலப்பால்,இந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு புற்று நோய் மற்றும் தோல் நோய்கள் வருவதால் அதிகளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும்,எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவித்தனர்.உடனடியாக அதிக பாதிப்புகள் வரும் நீர்நிலைகளில் முன்னதாக கழிவுகள் கொட்டுவதையும்,கலப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க