April 22, 2021
தண்டோரா குழு
கேரள மாநிலம் கொச்சி நகரம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு கேரளா மற்றும் கோவையில் ரூ.2000 கள்ள நோட்டு புழக்கத்தில் சிலர் விடுவதாக தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் கேரள போலீஸ் தனிப்படையினர் நேற்று கோவை வந்து கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரப் வயசு 24 என்பவரை தமிழகக் காவல்துறை மற்றும் கேரள காவல்துறை கூட்டு முயற்சியால் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் வயது 32 என்பவர் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ 1.8 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டது என்பது உள்பட பல்வேறு தகவல்களை தனிப்படை போலீசார் இரண்டு பேரிடமும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து கைதான 2 பேரையும் கேரளா கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள கேரளாவுக்கு அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரிஷாத் (30),போத்தனூர் மெயின் ரோடை சேர்ந்த அசாருதீன்(28) இருவரையும் கைது செய்து கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.