January 28, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் பாரம்பரியமிக்க பல்வேறு விழாக்களை பலரும் மறந்து வரும் நிலையில்,கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் மற்றும் மனமகிழ் மன்றம் எனும் அமைப்பை உருவாக்கி , தமிழர் பாரம்பரிய பண்டிகைகளை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர் இதில் வருடந்தோறும் கொண்டாடி வரும் நிலாச்சோறு விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி,தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை கொண்டாடி வருகின்றனர்..
அதன் படி நடைபெற்ற நிலாச்சோறு விழாவில்,சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த நித்யாராணி கூறுகையில்,
இது போன்ற விழாக்களை பலரும் மறந்து வருவதாகவும்,இது போன்ற விழாக்களை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இதில் குழுந்தைகளும் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.