• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

January 1, 2020

உலகம் முழுவதும் ஆங்கில புதுவருடப் பிறப்பை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

கோவையில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழைமையான புனித மைக்கேல் தேவாலயத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை போற்றும் விதமாக பாடல்கள் பாடப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய திருப்பலி மற்றும பிராத்தனை நிகழ்ச்சிகள் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதனை தொடர்ந்து எல்லா மதத்தினருக்கும் , அண்டை வீட்டாருக்கும் கேக் மற்றும் உணவு பொருட்களை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு அனைத்து மத்த்தினருடன் இணைந்து இந்த ஆங்கில புதுவருடப் பிறப்பை உற்சாகமாக மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க