February 3, 2018
தண்டோரா குழு
கோவையில் கல்விக் கட்டணத்தை முறையாக்க கோரி கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே,தனியார் பள்ளிகளின் சுரண்டலை தடுத்து கல்விக் கட்டணத்தை முறையாக்க கோரி கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது தனியார் பள்ளி மூலம் சுரண்டலை தடுத்து நிறுத்தி,சட்டவிரோத கட்டணத்தை வாங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி கட்டணம் மற்றும் தரம் குறித்த மாநில மற்றும் மத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர்.
பள்ளி வளாகத்திலும் போக்குவரத்தின் போதும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், பள்ளிகளின் நிதி மற்றும் பாதுகாப்பு தணிக்கை செய்யவும், RTE சட்டம் 2009 இல் மேற்கண்டவை குறித்து திருத்தம் செய்து வெளியிட கோரிக்கை விடுத்தனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் உள் கட்டமைப்பை மேம்படுத்தி , கல்வியின் தரத்தை உயர்த்த வழிவகை செய்யவும், பள்ளி நிர்வாக குழு எனப்படும் SMC யில் 100% பெற்றோர் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
மேலும், கடமைகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.