• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரி வளாகம் முன்பு மாணவி தீ குளித்து தற்கொலை முயற்சி

November 19, 2019 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி அக்கல்லூரி வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சினேகா (19). இவர் இன்று காலை தனது கல்லூரி அருகே திடீரென உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கல்லூரி மாணவியை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் தீயானது உடம்பில் வேகமாக பரவியதையடுத்து பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மாணவியை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த உறவினர்கள், மாணவியை அரசு மருத்துவமனையில் இருந்து மாற்றி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவிக்கு உடல் முழுவதும் தீயானது 90% வரை பரவியுள்ளதால் மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க