கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிதடி மோதல் குறித்து போலீசார் விசாரணை – பிபிஏ துறை சார்ந்த சீனியர் மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் ஜுனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி அடித்து வெறிச்செயல்
கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் ( நேரு) கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் ஜூனியர் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில்கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்டவர் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டபோது சீனியர்ன்னா பெரிய இவனா நீ ! இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம் என மிரட்டி அடித்தனர்.பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்று மிரட்டல் அளிப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து காதல் விவகாரமா?? கல்லூரியில் ரேகிங்? விவகாரமா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரி மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு இடையே மோதல் பொதுவெளியில் நடைபெற்றது.
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது.அதே போன்று இந்த சம்பவமும் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு