• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரி காம்பவுண்டு சுவர் இடிந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி

July 5, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணா கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இதனிடையே கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே அமைந்துள்ள பகுதியில் காம்பவுண்டு சுவர் ஒன்று உள்ளது இது கருங்கல்லால் ஆனது. இந்த சுவர் சுமார் 30 அடி நீளம் உள்ளது. உயரம் 5 அடி அளவில் உள்ளது.

இந்த காம்பவுண்ட் சுவர் ஒட்டியே புதிய காம்பவுண்ட் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக இந்த கருங்கலில் ஆன சுவரை ஒட்டி அஸ்திவாரத்திற்காக குழி தோண்டப்பட்டுள்ளது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பணிபுரிந்து வந்திருந்தனர்.

இதனிடையே நேற்று மாலை 5:30 மணி அளவில் காம்பவுண்டின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கல்கள் இடிந்து அனைத்தும் கீழே விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் ஐந்து பேரும் சிக்கினார்கள். இதில் நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில்.ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உயிரிழந்தவர்கள் விவரம்:

ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (53), நக்கிலா சட்யம் (48), ரப்பாகா கண்னையா(49) மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிஸ் கோஸ், வருன் கோஸ் ஆகும்.

மேலும் படிக்க