April 11, 2018
தண்டோரா குழு
கோவையில் கர்நாடகா பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டதால்,கோவையிலிருந்து கர்நாடகாவிற்கு எந்த பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.இதனால் பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
கோவை புளியம்பட்டி பகுதியில் கர்நாடகாவில் இருந்து வந்த பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கர்நாடகா பேருந்துகள் தாக்கப்பட்டு வருவதால் கோவையில் இருந்து கர்நாடகாவிற்கு எந்த பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.அதேபோல கர்நாடகாவில் இருந்தும் எந்த பேருந்துகளும் கோவைக்கு இயக்கப்படவில்லை.இதனால் கர்நாடகா பேருந்துகள் அனைத்தும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்கபடாததால் பயணிகள் பலரும் பாதிப்பிற்குள்ளாகினர்.