May 7, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநில தலைவராக உள்ள வேலுச்சாமி, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மகேந்திரன் குறித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரனை விலக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் கோரிக்கை விடுத்து இருந்தோம். இதனை ஏற்று தலைவர் கமலஹாசன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வழிநடத்தியவர் மகேந்திரன். அவர் மக்கள் நீதி மய்யத்தை படுகுழியில் தள்ள பார்த்தவர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை தெற்கு தொகுதியில் தொற்கடிக்க வேண்டும் என்று அனைத்து கட்ட பணிகளையும் மறைமுகமாக பணியாற்றியது மட்டுமின்றி தலைவரின் வெற்றியை பறிக்க பாடுபட்ட பணிகளை கூட அவர் சிங்காநல்லூர் தொகுதியில் செய்ய வில்லை என்றார்.
மேலும், அவரது எண்ணம் முழுக்க முழுக்க, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற கூடாது என மறைமுகமாக செயல்பட்டவர் மகேந்திரன் எனவே அவரை தூக்கி வீசி உள்ளதாக தெரிவித்தார்.