• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கனெக்டட் டெக்னாலஜி தொழில்நுட்பங்களுடன் கூடிய டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

June 17, 2021 தண்டோரா குழு

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், கோவையில் தனது டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக், சுற்றுசூழலுக்கு உகந்த ஒரு பசுமை இருசக்கர வாகனமாகும். இவ்வாகனம், கனெக்டட் தொழில்நுட்பம் உடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், நகர்ப்புற அன்றாட பயணங்களுக்கு உற்சாகமளிக்கும் தயாரிப்பாக இருப்பதோடு, மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் என அபாரமான ஆற்றல்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகி இருக்கிறது.

இது குறித்து டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் என்பது ஒரு மேம்பட்ட எலெக்ட்ரிக் டிரைவ் ட்ரெய்ன் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்மின் மிகச் சிறந்த கலவையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பெங்களூரு மற்றும் டெல்லியில் கிடைத்திருக்கும் அமோகமான வரவேற்பிற்கு பிறகு, எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும் இங்கு எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அபரிதமான வரவேற்புடன், இன்னும் புதிய உயரங்களைத் தொடுவோம் என உறுதியாக நம்புகிறோம். டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் விநியோக வழிமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான இயங்குதளங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்திற்கான முன்பதிவையும், பணம் செலுத்துவதையும் கூட ஆன்லைன்னிலேயே எளிய முறையில் மேற்கொள்ள உதவுவதோடு, நேரடி மனிதத் தொடர்பு இல்லாமல் வாகன விநியோகத்தை மேற்கொள்ளும் அருமையான வாய்ப்புகளையும் அளிக்கிறது. என்றார்.

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்கில் ஆற்றல்மிக்க 4.4 கிலோவாட் மின்சார மோட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது,இது அதிக சக்தி மற்றும் அபாரமான செயல்திறன் இரண்டையும் எந்தவிதமான ட்ரான்ஸ்மிஷன் இழப்பும் இல்லாமல் வழங்குகிறது. டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கி.மீ ஆகும்.முழு சார்ஜ் செய்தால் 75 கி.மீ. வரை பயணிக்கலாம்.மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.2 வினாடிகளில் 0 முதல் 40 கி.மீ வேக டார்க்கை அளிக்கிறது.

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் தனியுரிமை அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் ப்ளாட்ஃபார்ம் மேம்பட்ட டிஎஃப்டி கிளஸ்டர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் மொபைல் அப்ளிகேஷன் ஆகிய நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனானது, ஜியோ-ஃபென்சிங், ரிமோட் பேட்டரி சார்ஜ் ஸ்டேட்டஸ்,நேவிகேஷன் உதவி, கடைசியாக வாகனத்தை நிறுத்திய இடம் மற்றும் மொபைல் ஃபோனிற்கு வரும் அழைப்பு எச்சரிக்கைகள் / எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது.

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது, க்யூ-பார்க் அசிஸ்ட், மல்டி-செலக்ட் எகனாமி மற்றும் பவர் மோட், டே & நைட் டிஸ்ப்ளே, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் சத்தமில்லாத மற்றும் சௌகரியமான பயண அனுபவம் உள்ளிட்ட இன்னும் பல புதுமையான அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

வெள்ளை நிறத்தில், அட்டகாசமாக ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் மேலும் அழகியலின் தயாரிப்பாக, நுட்பமான மற்றும் செயல்பாடு மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், க்ரிஸ்டல் க்ளியர் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், முழுவதும் எல்.இ.டி யினால் வடிவமைக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் ஒரு கண்களைக் கவரும் வகையில் ஒளிரும் லோகோ உடன் கம்பீரமாக தோற்றத்தைக் கொடுக்கிறது.

வாங்குவதற்கு முன்பாக டெஸ்ட் ரைடு மற்றும் ஜிட்டல் முன்பதிவு கிடைக்கும் வாய்ப்புகள டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்கை அதன் வலைத்தளத்தின் மூலம் 5,000 ரூபாய் முன் பதிவு தொகையாக செலுத்தி முன்பதிவை மேற்கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து முழுவதும் வெளிப்படையான டிஜிட்டல் அடிப்படையிலான வாகனம் வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது டிவிஎஸ் மோட்டர் நிறுவனம். வாகனம் வாங்குவது முதல் அதற்கான வாடிக்கையாளர் சேவை வரை அனைத்திற்கும் உதவும் வகையில், ஒரு ப்ரத்யேகமான வாடிக்கையாளர் உறவு உதவி பிரிவு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
டிவிஎஸ் க்ரெடிட் வழங்கும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் வாடிக்கையாளர் பெறலாம். டிவிஎஸ் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் சௌகரியத்தையும் கருத்தில் கொண்டு வாகனங்களை விநியோகம் செய்வதை நேரடி மனித தொடர்பு இல்லாமல் வழங்கும் வசதியை தொடங்கியிருக்கிறது.

டிவிஎஸ் மோட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சார்ஜிங் வாய்ப்புகளுடன் கூடிய விரிவான சார்ஜிங் சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஸ்மார்ட்எக்ஸ்ஹோம் சார்ஜிங் வசதியைப் பெறலாம், இந்த சார்ஜிங் செய்யும் வசதியானது ப்ளூடூத் இணைப்புடன், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் மற்றும் ஆர்.எஃப்.ஐ.டி செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றுடன் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் ப்ரத்யேக வசதியை வழங்குகிறது. தற்போது, டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான சார்ஜிங் யூனிட்கள் கோயம்புத்தூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், டிவிஎஸ் நிறுவனம் நகரம் முழுவதும் நெட்வொர்க்கை மேலும் பரவலாக விரிவுபடுத்துவதன் மூலம் மாபெரும் பப்ளிக் சார்ஜிங் சூழலை உருவாக்கி வருகிறது.

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கோயம்புத்தூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில், இன்று முதல் கிடைக்கும். இதன் ஆன் ரோட் விலை र. 1,15,218 ஆகும் [FAME II மானியத்திற்கு பிறகு].

மேலும் படிக்க