• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி காளி நடனம் ஆடிய நிறைமாத கர்ப்பிணி

January 11, 2021 தண்டோரா குழு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டி , கோவையில் நிறைமாத கர்ப்பிணி கண்ணாடி துண்டுகள் மீது நின்றபடி காளி நடனம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

கோவையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் தம்பதியர் பிரகலட்சுமி, மற்றும் கலையரசன். கிராமிய கலைகளில் பல்வேறு உலக சாதனை நிகழ்த்தி வரும் இவரது மனைவி பிரகலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்த கோரி ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் காளி உள்ளதை தெரிவிக்கும் வகையில் நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கண்ணாடி துண்டுகள் மீது காளி நடனம் ஆடி பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சிவப்பு புடை அணிந்து,காளி போல வேடமணிந்து நாக்கை துருத்தியபடி, ஆக்ரோசமாக கண்ணாடி துண்டுகள் மீது நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி ஆட அவருடன் இணைந்து கருப்புசாமி வேடமணிந்த கலையரசன் இணைந்து ஆடினார்.நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி தனது சாதனை குறித்து கூறுகையில்,நாடு முழுவதும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியதாகவும், மேலும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் காளி இருப்பதை தெரியப்படுத்த இதன் வாயிலாக தாம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க