April 1, 2020
தண்டோரா குழு
கோவையில் இருந்து கண்டெய்னர் லாரியில் 250 வட மாநில தொழிலாளர்களை மறைத்து வைத்து ஏற்றி சென்ற 5 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் ஏஜி புதூர் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 5 கண்டைனர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வீதி கொரானா பீதி காரணமாக தர்மாகோல் லாரியில் 250 ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களை லாரியில் மறைத்து வைத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.
197 பேர் 3 கண்டெய்னரில் ராஜஸ்தான் மாநிலத்திற்கும், 53 பேரை 2 கண்டெய்னரில் மத்திய பிரதேச மாநிலத்திற்கும் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் வயது (40) பல்ராம் 3(8) உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திர பால் சிங் (28) டெல்லியை சேர்ந்த அணில் குமார் (28)உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் பாட்டியா (32) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், நோய் தொற்றை பரப்புதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.