April 12, 2020
தண்டோரா குழு
கோவை மாநகரின் உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் 30 நிமிடங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் கொரோனா தடுக்க ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.மேலும் வரும் நாட்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உள்ள நிலையில் தேவையின்றி சாலையில் வருவோரை போலீஸார் எச்சரித்து வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இன்று காலை முதல் உக்கடம், ஆத்துப்பாலம், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் காலை 9.00 லிருந்து 9.30 வரை மற்றும் 11.30 லிருந்து 12.00 வரை சாலைகள் முழுமையாக மூடப்பட்டு தடை மீறி வருவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.
அதைப்போல் மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் இதே போன்று தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.