August 2, 2021
தண்டோரா குழு
கோவையில் கடிதம் எழுதி வைத்து ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காட்டூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்குமார்(47) ஆட்டோ ஓட்டுநர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் உள்ள சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கடிதத்தை கைப்பற்றினர்.இதனை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.