January 27, 2020
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வபுரம் போலீஸார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது இரு சக்கர வாகனத்துடன் சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த கள்ளமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இஸ்மாயில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இஸ்மாயிலை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 1.350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.