• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓவியச்சந்தையை காண குவியும் பொதுமக்கள்

January 11, 2020 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ஓவியச்சந்தை கண்காட்சியை காண பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

கோவை விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இன்று ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் ஓவியச்சந்தை என்ற பெயரில் ஓவியம் மற்றும் கலை பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில் கோவை மற்றும் சுற்றுவட்டார கலைஞர்கள் 140 பேரின் ஓவியங்கள் மற்றும் கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஓவியர்கள் வாழ்வாதாரத்தை பெறுவார்கள் என்றும், மக்கள் மத்தியிலும் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும் ஓவியச்சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க