• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓய்வூதிய பணத்தை தராத தந்தை வெட்டிக் கொலை – மகன் தலைமறைவு

April 23, 2022 தண்டோரா குழு

கோவை புளியகுளம் பகுதியை கருப்பசாமி (61). பி.ஆர்.எஸ் வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி வசந்தி, மகன் சுரேஷ், பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் சுரேஷுக்கு திருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் கருப்பசாமி கடந்த சில மாதங்களாக விமலா என்ற பெண்ணுடன் சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கருப்பசாமிக்கு அன்மையில் ஓய்வூதியம் வந்ததாக தெரிகிறது.

அந்த பணத்தையும் மொத்தமாக விமலாவிடம் கொடுத்துள்ளார்.இதனால் கருப்பசாமி மற்றும் சுரேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கருப்பசாமி டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, விமலா வீட்டு வாசலில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த சுரேஷ் கருப்பசாமியை அருகே உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று ஓய்வூதிய பணம் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சுரேஷ், கருப்பசாமியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவானார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க