• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரம்

December 10, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக மக்களிடம் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இதற்காக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விரல் ரேகை பதிவு செய்யும் பணியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இத்திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பரிசோதனை முறையில் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் விரல் ரேகை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் அனைத்து கடைகளிலும் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் கைரேகை பெறப்படும்,” என்றார்.

மேலும் படிக்க