January 19, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் 100 மக்கள் சபை கூட்டங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுகவை நிராகரித்து கையெழுத்து இட்டுள்ளதாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா கார்த்திக் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் தி.மு.க.சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் சுமார் 1கோடியே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 508 பேர் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டு உள்ளதாகவும் கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 100 மக்கள் சபை கூட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை கருதி மழையினால் வீடுகளிலிருந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டி நாளை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.