• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை

October 16, 2021 தண்டோரா குழு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கோவையில் மதிய நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சுமார் ஒரு மணி அளவில் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காந்திபுரம்.,சிவானந்தா காலனி., வடகோவை., உக்கடம்., போத்தனூர்., சுந்தராபுரம்., ஆர்.எஸ்.புரம்., சிங்காநல்லூர்.,துடியலூர்.,தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மதிய நேரமான ஒரு மணி அளவிலேயே மாலை 6 மணி போன்று இருட்டாக காணப்பட்டது மழை அதிகரித்ததன் காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை தெரிவித்த வண்ணம் பயணம் மேற்கொண்டனர் குறிப்பாக காந்திபுரம் சிவானந்தா காலனி போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

இருப்பினும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மழையில் நனைந்தபடியே பயணம் மேற்கொண்டனர் கடந்த இரண்டு வார காலமாகவே திடீரென விட்டு விட்டு பெய்து வந்த கனமழை மற்றும் சாரல் மழை திடீரென இன்று பலத்த மழையாக கோவையில் கொட்டித் தீர்த்தது இதனால் சாலை எங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க