March 23, 2020
தண்டோரா குழு
கோடை காலம் துவங்க உள்ள நிலையில் கோவையில் இன்று திடீரென கனமழை பெய்தது.
கோவையின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், பீளமேடு, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
இருப்பினும் வெப்பம் இல்லாத பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளதால் மக்கள் சிலர் அச்சமடைந்தும் உள்ளனர்.