• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒமைக்ரான் பாதித்தவர் குணமடைந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் – ஆட்சியர் தகவல்

January 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.671 கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக 83 பள்ளிகளில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை, மாநகராட்சி துறையின் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அவரும் குணமடைந்து தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பொதுவெளிகளில் வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியினை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கோவை மாநகராட்சி பகுதிக்கு அருகில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சுமார் 2000 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாநகராட்சி பகுதியில் மட்டுமே சுமார் 900 களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க