June 5, 2021
தண்டோரா குழு
முழு ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு பீளமேடு பகுதி கழகம் சார்பாக அந்த பகுதியில் வசிக்கும் ஏழை தொழிலாளர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் கொரானா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு ஏழை தொழிலாளர்கள் ஆதரவற்றோர் சாலையோரம் வசிப்போர் என பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர் இவர்களின் பசியை போக்கும் விதமாக கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உணவு வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பீளமேடு பகுதி கழக செயலாளர் பிந்து பாலு ஏற்பாட்டில் பீளமேடு தோட்டம் ஸ்ரீபட்டாளம்மன் கோவில் வளாகத்தில் தினமும் சுமார் 500 பேருக்கு உணவு சமைத்து அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து பீளமேடு பகுதி செயலாளர் பிந்து பாலு கூறுகையில்,
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆலோசனையின் பேரிலும் மாநகர் மாவட்டச்செயலாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும் தொடர்ந்து இவ்வாறு உணவு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதில் அவருடன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைச் செயலாளர் கலைமணி மற்றும் பீளமேடு பகுதி நிர்வாகிகள் கதிர்வேல், புஷ்பலதா, லட்சுமி வார்டு செயலாளர்கள் மனோகரன் முருகேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.