July 18, 2018
தண்டோரா குழு
வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள இந்திய வர்த்தக சபை அரங்கில் ஏகல் வித்தியாலயா சார்பில் கல்வி மையம் தொடக்க விழாவானது நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய ஏகல் அபியான் நிர்வாக குழுவின் தலைவர் எச்.பங்கரா அவர்கள் கூறுகையில்,
“வடமாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையிலும் தொடங்கப்பட்டுள்ளது.இக்கல்வியானது கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.இதுவரை 22 மாநிலங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுவதாகவும்,நேபாளத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளதாகவும்,தேசிய அளவில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும்,அரசு உதவி இல்லாமல் அறக்கட்டளை மூலம் இப்பள்ளிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்”.