• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

June 5, 2019 தண்டோரா குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக இன்று 05-04-2019 கோவை கரும்புக்க்டை பொருட்காட்சி பாப்புலர் பார்க் லேஅவுட் மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்பு தொழுகைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் மாவட்டத் தலைவர் முஹம்மது சமீர் உரையாற்றினார்.இதில்உலக அமைதியையும், மனிதர்களிடையே சகோதரத்துவம் – சமத்துவம் –மனிதநேயம் திழைத்திடவும் , தற்போது நாட்டில் சிறுப்பான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிழவும் அச்ச உணர்வு நீங்கி மக்கள் புரிந்துணர்வுடன், சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

தொழுகையின் இறுதியில் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியினை பரிமாறி கொண்டனர். அதே போல் ஏழைகள் ரமலான் பண்டிகையை ஏழைகளும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகைக்கு முன்னர் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட கிளைகள் சார்பாக அரிசி, என்னை, நெய், காய்கறிகள் போன்ற உணவு பொருட்கள் 500 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க