• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எலி பொம்மையை வாயில் கடித்தபடி போராட்டம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி  திமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் வாயில் எலி பொம்மையுடனும்,கழுத்தில் எலும்பு கூடு பொம்மை அணிந்தபடியும் இன்று(ஏப் 4)சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியில் திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு மாட்டு வண்டிகளுடன் கலப்பையுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வாயில் பொம்மை எலியுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் பொய்த்து எலிக்கறி உண்ணும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும்,கழுத்தில் எலும்பு கூடு பொம்மை மாலை அணிந்த படியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 

மேலும் படிக்க