• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊர்காவல் படையை சேர்ந்தவர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது!

October 3, 2021 தண்டோரா குழு

கோவையில் 17 வயது இளம் பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த ஊர்காவல் படையை சேர்ந்தவர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை குணியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, ரவிகுமார், விஜயகுமார், ஆகியோர் 17 வயது இளம் பெண்ணிற்கு வாட்ஸாப்பில் தொடர்ந்து ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை பலமுறை கண்டித்தும் தொடர்ந்து ஆபாசமாக தகவல்களை செல்போன் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து. அவர்கள் கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் பாலியல் தொல்லை கொடுத்த மூவரையும் கைதுசெய்து, விசாரணை செய்தனர்.

விசாரனையில் ராமமூர்த்தி, விஜயகுமார் ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள், மேலும் விஜயகுமார் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார் என்பதும் ரவிக்குமார் இவர்கள் மூவரும் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து குணியமுத்தூர் போலிசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற முறையற்ற பழக்கவழக்கங்களால் சாதிக்க வேண்டிய இளைஞர்கள் தங்களுடை வாழ்க்கையை கெடுத்துகொள்வதாகவும், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் இளம் பெண்கள் உடனடியாக தங்களின் பெற்றோருக்கு தெரியபடுத்தி உரிய நடவடிக்கைகள் எடுத்தால் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம், என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க