• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை

November 2, 2022 தண்டோரா குழு

கோவையில் கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய தலைமை போதகர் ஆயர் டேவிட் பர்னபாஸ் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார்.இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது முன்னோர்களின் கல்லறையில் இருக்கும் சீரமைத்து வர்ணம் பூசி கல்லறைகளை அலங்கரித்து மலர் தூவி, மெழுகுவர்த்தி பற்ற வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

மேலும் படிக்க