February 5, 2018
தண்டோரா குழு
கோவையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (பிப் 4) நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவையில் தனியார் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவமனை இயக்குனர் தங்கவேலு துவக்கி வைத்தார். காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக்கிலிருந்து துவங்கிய ஊர்வலத்தில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.மேலும்,ஊர்வலத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைளை ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சென்றனர்.