• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிப்பு

November 14, 2020 தண்டோரா குழு

லோட்டஸ் கண் மருத்துவமனை, துளசி பார்மஸி மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14-ம் நாள் உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டு சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனை, துளசி பார்மஸி மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து ஒரு மாபெறும் இலவச சர்க்கரை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதற்கான துவக்க விழா 13.11.2020 காலை ஆர்.எஸ்.புரத்திலுள்ள துளசி பார்மஸியில் நடைபெற்றது. துவக்க விழாவில் பேசிய துளசி பார்மஸி நிர்வாக இயக்குநர் எம். ராமகிருஷ்ணன்,உலகளவில் சுமார் 46 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் ஆண்டுதோறும்,சுமார் 10 லட்சம் பேர்
சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். மரபணு ரீதியாக இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதில் பலருக்கு கண் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க துளசி பார்மஸி, ரோட்டரி மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து
இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டம் 31.12.2020 வரை செயல்படும் என்றார்.

விழாவில் பேசிய ரோட்டரி கோவை சிட்டி தலைவர் அத்தீஷ் குமார் ஸ்வைன்,

ரோட்டரி சங்கங்கள் மக்கள் உடல் நலம் பேணுவதற்காக செயல்படுத்தும் பல திட்டங்களில் இந்த திட்டமும்,முக்கியமான ஒன்றாகும் என்றார். ரோட்டரி சங்கங்கள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்லோட்டஸ் கண் மருத்துவமனையின் உபதலைவர் தமிழ செல்வன் பேசுகையில், இத்திட்டத்தின்கீழ் துளசி பார்மஸியின் அனைத்துக் கிளைகளிலும் தங்ளுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்க்கரை மற்றும் கண் பரிசோதனை கூப்பன்களை வழங்குவார்கள்.

இந்த கூப்பனை பெற்று லோட்டஸ் கண் மருத்துவமனையின் ஆர்.எஸ்.புரம் பீளமேடு, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் கிளைகளில் இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.மேலும்,சர்க்கரை நோயினால் உண் டாகும் கண் பாதிப்பு பற்றிய
ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை பெறலாம் என்றார்.

மேலும் படிக்க