• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது

March 3, 2020

கோவையில் போலி சாவிகளை பயன்படுத்தி உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை அருகே இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், 16 வயது சிறுவன் ஒருவனின் உதவியுடன் போலி சாவிகள் மூலம் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 16 வயது சிறுவன், விக்னேஷ்பாரத், மருதாசலம், சபரி, அப்துல்ரகுமான், ரமேஷ், பிரபாகரன், விக்னேஸ்வரன் ஆகியோரை ரேஸ் கோர்ஸ் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க