March 30, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கொரோனா நிதியாக, தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 7060 ரூபாயினை மழலையர்கள் இருவர் வழங்கி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது.கொரோனா தொற்றுத்தடுப்பு நிதியை பொது மக்கள் வழங்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அந்த வகையில் கோவை ஆவாராம்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது 5 வயது மகன் ரேனோ ஜோஸ்வா (lkg) மற்றும் 4 மகள் ஷெர்லி (prekg) இருவரும் உண்டியலில் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக உறவினர்கள் கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து இருந்தனர்.
இந்நிலையில், அந்த சேமிப்பு 7060 ரூபாய் பணத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து கொரோனா தொற்று தடுப்பு நிதியாக வழங்கினர். தொலைக்காட்சியில் மக்கள் சாப்பாடு , தண்ணீர் இல்லாமல் நடந்து செல்வதை பார்த்து நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என குழந்தைகள் சொன்னதால் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து நிதியை ஆட்சியரிடம் கொடுத்து இருப்பதாக குழந்தைகளின் தந்தை சுரேஷ் தெரிவித்தார்.