April 14, 2020
தண்டோரா குழு
கோவையில் காவலருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கோத்தாரி நகரை சேர்ந்த 61 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் வசிக்கும் பகுதியை சீல் வைத்து பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
இவர் கடந்த 23ம் தேதி டெல்லி சென்று விமானம் கோவை திரும்பியுள்ளார் என்பதும் கடந்த 4 நான்கு நாட்களாக துடியலூரில்
காவலர்களுக்கு உணவு வாங்கியதும் துடியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் சென்று வந்த துடியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் நெருங்கி இருந்த உறவினர்கள் என 32 பேருக்கு நேற்று கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய செஸ்டிங் கிட் இல்லாததால் துடியலூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த 40 காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ள பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்டிங் கிட்கள் வந்தவுடன் நாளை அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனர் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபரின் அலட்சியத்தால் இன்று மருத்துவர்கள், போலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் இவருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் மருத்துவர்களுக்கு சளி மாதிரி எடுக்கும் பணி துவங்கியுள்ளது.இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.