April 12, 2021
தண்டோரா குழு
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் உணவகம் திறக்கப்பட்டதை அறிந்த உதவி ஆய்வாளர் ஒருவர் கடைக்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,தமிழக அரசு கடைகளை திறக்க கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், இந்த உணவகத்திற்கு வெளியூரில் இருந்து இரவு 10 மணியளவில் பெண்கள் சிலர் உணவு சாப்பிட வந்துள்ளனர்.இதனால், கடை பாதி மூடிய நிலையில்,அவர்களுக்கு உணவு பரிமாரப்பட்டது.
அப்போது காந்திபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் ரோந்து வந்துள்ளார். கடை பாதி திறந்ததை பார்த்த முத்து உள்ளே நுழைந்து ஊழியர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினார்.இதில் உணவக ஊழியர்கள் காயமடைந்தனர்.மேலும்,ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போது அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் நெத்தியிலும் பலமாக அடி விழுந்துள்ளது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வியாபாரிகள் போலீஸ் தொந்தரவு செய்வதாகவும்.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காந்திபுரம் பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,ஹோட்டலில் சாப்பிட்ட கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்து
கண்ட்ரோல் ரூமுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.