June 27, 2018
தண்டோரா குழு
கோவையில் ஒரு கடையில் வெளியே உடற்பயிற்சி செய்வது போல நின்று கொண்டு,அங்கு இருந்த பல்பை மெதுவாக திருடி செல்லும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவையை அடுத்த காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு கடையின் பல்பை காணவில்லை என்பதால் அந்த உரிமையலார் கடையில் இருந்து சி சி டி வி கேமாரா பதிவுகளை பார்த்துள்ளார்.அப்போது, அதிகாலை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் கடையின் வெளியே நின்று சிறுது நேரம் உடற்பயிற்சி செய்து கொன்று இருக்கிறார்.பின்னர் சில நிமிடங்களுக்கு அங்கு இருந்த பல்பை நோட்டமிடும் அவர்,திடீரென பல்பை கழட்டி தனது பாக்கெட்டில் வைத்து உடனடியாக அங்கு இருந்து செல்கிறார்.இந்த காட்சிகள் அனைத்து சி சி டி வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.