• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் புதிய சேவை துவக்கம் !

June 17, 2021 தண்டோரா குழு

கோவை சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் இரண்டாவது அலை பரவலில் பாதிக்கபட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்த பரிதாபம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமானதால், ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு உயிரும் போக கூடாது எனும் நோக்கத்தில் கோவை சென்னை மொபைல்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக உங்கள் இல்லம் தேடி இலவச ஆக்சிஜன் எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதன் படி இவர்களுடன் மனித நேயம் பவுண்டேஷன் மற்றும் பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆகியோர் இணைந்து கொரோனா பாதித்து, ஐந்து லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைபடுபவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர்களது இல்லத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

இந்த சேவையை துவக்கி வைத்த சென்னை மொபைல்ஸ் சம்சு அலி மற்றும் ஸ்ரீதேவி சில்க்ஸ் சிவகணேஷ் ஆகியோர் பேசுகையில்,

தற்போது ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதால் செறிவூட்டிகளை தேவைபடுபவர்களுக்கு அவர்களது இல்லத்திற்கே சென்று தேவைப்படும் நாட்கள் வரை வழங்குவதாகவும்,கோவையை சுற்றி சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை இந்த சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.

துவக்க நிகழ்ச்சியில் மனித நேய பவுண்டேஷன் தலைவர் சுலைமான்,பசியில்லா தமிழகம் முகம்மது அலி ஜின்னா,பிரின்ஸ் நசீர்,ஒரு ரூபாயில் ஒரு உயிர் காஜா மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க