November 18, 2021
தண்டோரா குழு
செயிண்ட்– கோபைன், மைஹோம் ரேஞ்ச் என்பதன் கீழ்,அதன் புத்தாக்க, இல்லங்களுக்கான தீர்வுகள் தொகுப்பை லீ மெரிடியனில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்திருக்கிறது.
வடிவமைப்பு யோசனைகளிலிருந்து உற்பத்தி, அமைவிடத்தை நிறுவுதல் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் வரை வழங்கப்படும் முழுமையான தீர்வுகளாக இவைகள் இருக்கின்றன.இத்தொகுப்பின் வழியாக தீர்வுகளுக்கான வீடு உரிமையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்நிறுவனத்தின் இலக்காகும்.
ஒட்டுமொத்த கட்டிட தொழில்துறையில் 80 சதத்துக்கும் அதிகமான பங்குள்ள பெரிய பிரிவாக திகழ்வது குடியிருப்பு மற்றும் இல்லங்களுக்கான சந்தையே. பல்வேறு சிக்கலாக சூழல்களில் இல்ல தீர்வுகளுக்கான சந்தை முறைப்படுத்தப்படாமல் அதிக பிளவுண்டு இருப்பதால் வீடுகளுக்கு ஃபர்னிஷிங் செய்யும் பணி மிகச்சிரமமானதாக வீட்டு உரிமையாளர்களுக்கு இருக்கிறது. தொடக்கத்திலிருந்து,இறுதிவரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் முறையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இல்ல தீர்வுகளுக்கான சந்தையை செயிண்ட்-கோபைன் புரட்சிகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
நிலைக்கத்தக்க கட்டுமானப்பொருட்கள் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கும் செயிண்ட் – கோபைன், தரமான வடிவமைப்புகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நேர்த்தியாக வழங்குவதில் புகழ்பெற்றிருக்கிறது. எமது வாழ்க்கைக்கு மைய அமைவிடமாக இல்லங்கள் இருப்பதால், ‘மைஹோம்’ என்ற புத்தம் புதிய கருத்தாக்கத்தின் வழியாக பல்வேறு தயாரிப்புகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது.
ஜன்னல்கள், ஷவர் கியூபிக்கல்கள், மேற்கூரைகள், சமையலறை மற்றும் வார்ட்ரோப் ஷட்டர்கள், ரூஃபிங் பொருட்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை இத்தயாரிப்புகளுள் உள்ளடங்கும். ஒரு அமைவிடத்தின் கீழ், தீர்வுகளின் ஒட்டுமொத்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் சிரமமே இல்லாத இனிய அனுபவத்தை உருவாக்க செயிண்ட் – கோபைன் முற்படுகிறது. அதே நேரத்தில் இறுதி நுகர்வோரின் வீட்டு வாசலிலேயே மிக நவீன தயாரிப்புகளையும் மற்றும் தீர்வுகளையும் இது வழங்குகிறது.
வடக்கு கோயம்புத்தூரில், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மைஹோம் ஸ்டோரில் செயிண்ட்-கோபைன் தயாரிப்புகள் மீது நேரடி அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்தியா முழுவதிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளின் தொகுப்பை அழகாக காட்சிப்படுத்துகின்ற பல ஸ்டோர்களுள் இதுவும் ஒன்றாகும்.
மைஹோம் அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக UPvC விண்டோஸ் கலெக்ஷனையும் மற்றும் அதைத்தொடர்ந்து குளியலுக்கான ஷவர் கியூபிக்கல்ஸ்களையும் செயிண்ட் – கோபைன் அறிமுகம் செய்தது. 100 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் உயர் தானியக்க வசதி மற்றும் டிஜிட்டல் முறையைப் பின்பற்றும் செயிண்ட் – கோபைன் – ன் இத்தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தயாரிப்புகள் யாவும் முழுமையாக பிரத்யேகமானவை. பல்வேறு புராடக்ட் வகைகள், அளவுகள், கிளேசிங் மற்றும் துணைப்பொருட்களை அவர்களது வீட்டு அலங்கார அமைப்போடு ஒத்துப்போகும் வகையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
கண்ணாடி, புரொஃபைல், வன்பொருள் மற்றும் வீட்டிற்கே வந்து அளவெடுத்தல் மற்றும் நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்குகின்ற இந்தியாவின் முதல் முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டமாக செயிண்ட் – கோபைன் விண்டோக்கள் திகழ்கின்றன. ஐரோப்பிய பொறியியல் மற்றும் வடிவமைப்பு திறனைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜன்னல்கள், நேர்த்தியான தோற்றத்தோடு நீண்டநாள் உழைப்பதோடு, பயன்படுத்தவும் மிக எளிதானவையாக இருக்கின்றன.
இதுபோலவே, ஷவர் கியூபிக்கிள்ஸ் – ன் அணிவரிசையும் கண்ணாடி, வன்பொருள் மற்றும் வீட்டிற்கே வந்து அளவெடுத்தல் மற்றும் நிறுவுதலை உள்ளடக்கிய முழு சேவை தொகுப்பாக வழங்கப்படுகின்றன. எந்தவொரு அளவு மற்றும் வடிவமைப்பிலுள்ள குளியலறைக்கும் பொருத்தமானதாக 500+ டிசைன் விருப்பத்தேர்வுகள், நுகர்வோருக்கு கிடைக்கப்பெறுகின்றன.
செயிண்ட் – கோபைன் இந்தியா நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் ஹேமந்த் குரானா இதுபற்றி கூறியதாவது:
“இந்தியாவில் செயிண்ட் – கோபைனுக்கு குறிப்பிடத்தக்க கணிசமான வாய்ப்பை இல்லங்களுக்கான பிரிவு வழங்குகிறது. 25 பில்லியனுக்கும் அதிகமான சந்தை அளவோடு 8-10 சதம் என்ற CAGR வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இப்பிரிவு, இன்னும் நிகழவிருக்கின்ற மாபெரும் நகரமயமாக்கல் வாய்ப்பின் காரணமாக, இன்னும் வேகமாக வளர்ச்சி காணும். சீனாவில் நகரமயமாக்கல் 62% என இருக்கின்றபோது, இந்தியாவில் அது வெறும் 32 சதம் என்ற அளவிலேயே இருக்கிறது. மக்களுக்கு வேறு எதற்கும் முன்னதாக குடியிருப்பதற்கு வீடு தேவைப்படுகிறது.
சொந்தமாக ஒரு வீட்டைக் கொண்டிருப்பதற்கான தேவையை இந்த பெருந்தொற்று சூழல் இன்னும் துரிதப்படுத்தியிருக்கிறது. பெரிய வீடுகளை மக்கள் வாங்குவதோடு, அவர்களது வீடுகள் மீது அதிக தொகையை செலவிடுகின்றனர். எமது ஹோம் சொல்யூஷன்ஸ் (இல்லங்களுக்கான தீர்வுகள்) அணிவரிசையை இன்னும் வளர்த்தெடுக்க எமது முயற்சிகளை நாங்கள் தீவிரமாக்கி வருகிறோம். ஒரு பெரிய அளவிலான களப் பணியாளர்கள் வழியாக இத்தீர்வுகளை இல்ல உரிமையாளர்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். நேரில் தொட்டு பார்த்து பெறும் இனிய அனுபவத்தை வழங்க இந்நாட்டில் நிலை 1. நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில், 2021 – ம் ஆண்டு இறுதிக்குள் 50+ மைஹோம் ஸ்டோர்களை நாங்கள் திறக்கவிருக்கிறோம். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஹோம் சொல்யூஷன்ஸ் பிசினஸ் பிரிவிலிருந்து ரூபாய் 1000 கோடி வருவாயை திரட்டும் இலக்கை எங்களுக்கு நாங்களே நிர்ணயித்திருக்கிறோம். இந்நோக்கத்திற்காக எமது நுகர்வோர் தொடுமுனைகளை கட்டமைப்பது மீதும் மைஹோம் ஸ்டோர்களை தொடங்குவதற்காகவும் நாங்கள் பெரிய அளவில் முதலீட்டை செய்து வருகிறோம். சென்னை, கொச்சி, மும்பை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இந்த ஸ்டோர்களை ஏற்கனவே நாங்கள் தொடங்கியிருக்கிறோம். ஹோம் மற்றும் கட்டுமான பிரிவில் நிதியாண்டு 2022-2023 – க்கு இடைப்பட்ட காலத்தில் 2500 கோடிக்கும் அதிகமான தொகையை செயிண்ட்-கோபைன் முதலீடு செய்யும்.”
செயிண்ட் – கோபைன் இந்தியா நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் கே. ஸ்ரீஹரி பேசுகையில்,
“இறுதிநிலை நுகர்வோர்களுக்கு நலவாழ்வு அம்சங்களை வழங்குவது மீதே எமது கூர்நோக்கம் இருக்கிறது மற்றும் எமது பயணத்தில் இந்த அறிமுகம் ஒரு முக்கியமான மைல்கல். பல புத்தாக்கமான தீர்வுகளையும் மற்றும் புதுமையான “கோ டு மார்க்கெட்” வழிமுறையையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஜன்னல்கள் மற்றும் டவர் கியூபிக்கில்கள், வார்ட்ரோப்களுக்கான ஷட்டர்கள், கிச்சன் கேபினெட்கள், எல்இடி மிரர்கள் போன்ற மைஹோம் தீர்வுகள் மீது, வடக்கு கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மைஹோம் பிராண்டு ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் நேரடி அனுபவத்தைப் பெறலாம்,” என்று கூறினார்.
மைஹோம் அறிமுக நிகழ்வில் மாநிலம் முழுவதிலுமிருந்து இத்தொழில் துறையைச் சேர்ந்த முன்னணி ஆளுமைகள், கட்டிடக் கலைஞர்கள், உட்புற அலங்கார வடிவமைப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஸ்ரீனிவாஸ் மூர்த்தி வழங்கிய சிறப்புரை பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.