April 12, 2020
தண்டோரா குழு
இன்று ஒருநாள் மட்டும் இறைச்சி கடைகள் திறந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதித்து உள்ளதால் மக்களின் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இறைச்சி கடைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட் நிலையில்,இறைச்சி சங்கங்கள் நேற்றய தினம் கோவை மாவட்ட ஆசியர் ராசாமனியை சந்தித்து ஒருநாள் மட்டும் கடையினை திறக்க கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை கோவை மாவட்டத்தில் திறந்துகொள்ள அனுமதி அளித்தார் .
இன்று கடைசி நாள் என்பதாலும் ஈஸ்டர் பண்டிகை என்பதாலும் காலை முதலே மீன் ,கோழி மீன் போன்ற இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் தேவையின்றி வெளியே வருவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் அத்தியவசியம் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் கூட்டமாகவோ அல்லது அதிகமான குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரக்கூடாது. தேவையில்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மிகத்தீவிரமாக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் குறிப்பாக ஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அரசு அறிவுரைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.