June 11, 2021
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொடும் வகையில் கடுமையான விலையேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன் படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அவினாசி சாலையில், அண்ணா சிலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்,இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோசங்கள் எழுப்பினர்.