• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரு சக்கர வாகனத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி

July 23, 2018 தண்டோரா குழு

கோவையில் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலம் வந்தார்.

கோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது.இதன் காரணமாக கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.இந்நிலையில்,நிரம்பி வழியும் குளங்களையும் குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களான புட்டுவிக்கி போன்ற குளங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார்.

குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது.இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல,அவரது பின்னால் அமர்ந்த படி,பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.ஆனால் அமைச்சருடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் உட்பட பின்னால் சென்றவர்கள் யாரும் ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க