• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் நகை கொள்ளை!

October 5, 2021 தண்டோரா குழு

கோவை கணபதி மணியகாரம்பாளையம் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 131 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் வேலவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன்.இரும்பு வியாபாரி, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு கோவை வந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முதல் தளத்தில் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை உடைத்து அதில் வைத்திருந்த 131 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தினகரன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் உடன் வந்த போலீசார் கதவு மற்றும் இரும்பு பெட்டகங்களில் பதிவான கைரேகைகள் மற்றும் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

அதேபோல் வீட்டை சுற்றி உள்ள முக்கிய தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து 131 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க