March 30, 2018
தண்டோரா குழு
பல்வேறு நவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசின் பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பெங்களூருவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்த பேருந்தில் கழிப்பறை வசதி மற்றும் பயணிகளுக்காக WIFI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த பேருந்து கோவையில் இருந்து மதியம் 12மணிக்கு புறப்பட்டு இரவு 8 எட்டு மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைகிறது.
மீண்டும் பெங்களூரு விமான நிலையத்த்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய 1100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.தொழில் நகரான கோவையில் பெங்களூருவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கபடாத நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் பெங்களூருவிற்கு பேருந்து சேவை அறிமுகப்படுத்தி உள்ளது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.